14ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் 12ஆவது கூட்டம் 8ஆம் நாள் பிற்பகல் பெய்ஜிங்கில் நிறைவடைந்தது.
இக்கூட்டத்தில் பள்ளிக்கு முந்தைய கல்வி சட்டம், புதிதாக திருத்தப்பட்ட தொல்பொருள் பாதுகாப்பு சட்டம், புதிதாக திருத்தப்பட்ட தாது மூல வளங்கள் சட்டம் மற்றும் எரியாற்றல் சட்டம் முதலியவை வாக்கெடுப்பு மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
அதோடு, உள்ளூர் அரசுகளின் கடன் உச்ச வரம்பில் 6 லட்சம் கோடி யுவானை அதிகரிப்பது என்பது இக்கூட்டத்தில் பரிசீலனை மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. உள்ளூர் அரசுகள் பொருளாதாரத்தை சீராக வளர்ப்பது, மக்களின் வாழ்க்கையை உத்தரவாதம் செய்ய இது உதவும்.
இந்நடவடிக்கையின் மூலம் 2028ஆம் ஆண்டு வரை, உள்ளூர் அரசுகள் திரும்பி கொடுக்க வேண்டிய மொத்த மறைமுக கடன் தொகை, 14 லட்சத்து 30 ஆயிரம் கோடி யுவானிலிருந்து 2 லட்சத்து 30 ஆயிரம் கோடி யுவான் வரை பெருமளவில் குறைந்துள்ளது.
உள்ளூர் அரசுகளின் கடன் திரும்பி கொடுத்தல் அழுத்தம் பெரிதும் தணிவடையும் என்று சீன நிதி அமைச்சர் லன் ஃபோஅன் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.