பெண்ணுறுப்பில் ஊடுருவாமல் விந்து மட்டும் வெளியேறினால் பாலியல் வன்கொடுமையாகாது… உயர் நீதிமன்றத்தின் பகீர் தீர்ப்பு…!!! 

Estimated read time 1 min read

பெண்ணின் உறுப்பிற்குள் ஊடுருவல் (Penetration) நிகழாமல், விந்து வெளியேற்றம் (Ejaculation) மட்டும் நடைபெற்றால், அது சட்டப்படி வன்புணர்ச்சி (Rape) எனக் கருதப்படாது; மாறாக, அது ‘வன்புணர்ச்சி முயற்சி’ (Attempt to Rape) என்றே கருதப்படும் என சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது.

கடந்த 2004-ம் ஆண்டு, வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர், அவரது ஆடைகளைக் களைந்து அநாகரீகமாக நடந்துகொண்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்தத் தண்டனையை எதிர்த்து, சம்பந்தப்பட்ட நபர் கடந்த 2005-ம் ஆண்டு சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், வன்புணர்ச்சி குற்றத்திற்கான சட்டப்பூர்வ வரையறைகளைச் சுட்டிக்காட்டியுள்ளது.

பெண்ணின் உறுப்பிற்குள் ஊடுருவல் நிகழாத பட்சத்தில், அதனை வன்புணர்ச்சியாக வகைப்படுத்த முடியாது என்றும், அதனால் இந்த வழக்கை வன்புணர்ச்சி முயற்சி என்ற பிரிவின் கீழேயே கருத முடியும் என்றும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். இந்தத் தீர்ப்பு சட்ட வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author