கனடாவின் தலைமையமைச்சர் கார்னி சீனாவில் ஜனவரி 14 முதல் 17ஆம் நாள் வரை பயணம் மேற்கொண்டார். சீன அரசு தலைவர் ஷிச்சின்பிங் அவரைச் சந்தித்த போது, இரு தரப்பும் பரஸ்பர மதிப்பளித்தல், கூட்டு வளர்ச்சி, பரஸ்பர நம்பிக்கை மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பு ஆகிய நான்கு துறைகளில் கூட்டாளிகளாக இருக்க வேண்டும் என்றார். இருதரப்பு உறவுகளுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்க உத்தி நோக்கு வழிகாட்டலை இது வழங்குகிறது. இரு நாடுகளின் கூட்டறிக்கையில், பொருளாதார மற்றும் வர்த்தகம், எரியாற்றல், கலாசார பரிமாற்றம் முதலிய துறைகளில் சாதனைகளை ஊக்குவிக்க இருதரப்பும் ஒப்புக்கொண்டன. மேலும், எட்டு ஒத்துழைப்பு ஆவணங்கள் கையெழுத்தாகின. இது சீனா-கனடா உறவுகளின் சீரான வளர்ச்சி போக்கை வலுப்படுத்தியுள்ளது.
கார்னியின் சீனப் பயணத்தின் சாதனைகள், சீனா-கனடா உறவுகளின் சீரான வளர்ச்சி போக்கு ஆகியவை, கொந்தளிப்பு நிறைந்த உலகிற்கு மேலதிக நேர்மறையான ஆற்றலைக் கொண்டுவரும் என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அடுத்த கட்டத்தில் சீனாவும் கனடாவும் இருதரப்பு உறவுகளின் ஆரோக்கியமான, நிதானமான மற்றும் தொடரவல்ல வளர்ச்சியை ஊக்குவிப்பது குறித்து, அரசியல் பரஸ்பர நம்பிக்கை முக்கியம், வளர்ச்சி ஒத்துழைப்பு உந்து ஆற்றல், மக்களிடையேயான பரஸ்பர புரிதல் அடித்தளம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆசிய-பசிபிக் பிரதேசத்திலும் உலகளவில் கூட பெரும் செல்வாக்கைக் கொண்ட நாடுகளாக, சீனாவும் கனடாவும் பலதரப்புவாதம் மற்றும் தாராள வர்த்தகத்தின் பாதுகாவலர்களாக உள்ளன, பல சர்வதேச விவகாரங்களில் பொது நிலைப்பாடுகளைக் கொண்டுள்ளன. சீனாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பு உலகிற்கு மேலதிக நிலைத்தன்மையை வழங்கி, உலகளாவிய நிர்வாகத்தை மிகவும் நியாயமான மற்றும் சமமான திசையில் முன்னெடுத்துச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
