இலங்கை நாட்டில் சமீபத்தில் அதிபர் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் புதிய அதிபராக அனுரகுமார திசநாயக்க பொறுப்பேற்றார்.
இவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அதாவது தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணம் பகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது இலங்கை கடற்பகுதியில் இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பது தடுக்கப்படும் என்று கூறினார். அதாவது இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதால் இலங்கை கடல் வளம், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் கூறியவர் இந்திய மீனவர்கள் இலங்கை கடற் பகுதியில் மீன் பிடித்தால் கண்டிப்பாக அது தடுக்கப்படும் என்றார்.
மேலும் முன்னதாக இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழர்களின் நிலங்கள் அவர்களிடமே ஒப்படைக்கப்படும் என்று அவர் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற் பகுதிகளில் மீன்பிடிப்பதாக குற்றம் சாட்டி அவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் என்பது தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
இது தொடர்பாக இரு நாட்டுக்கும் இடையே பேச்சுவார்த்தை என்பது நடந்து வரும் நிலையில் தற்போது இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக மீன்பிடித்தல் அவர்களை கண்டிப்பாக கைது செய்வோம் என்று இலங்கை அதிபர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது