மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், மாநிலங்களுக்கு இடையேயான நிலைக்குழுவை மத்திய அரசு மறுசீரமைத்தது.
இந்த கமிட்டியில் மத்திய அமைச்சர்களான சிவராஜ் சிங் சவுகான், நிர்மலா சீதாராமன், ராஜீவ் ரஞ்சன் சிங், வீரேந்திர குமார் மற்றும் சிஆர் பாட்டீல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதேபோல ஆந்திரா, அசாம், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப் மற்றும் உத்தர பிரதேச மாநில முதலமைச்சர்களும் நிலைக்குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.