ஈக்வேடார் நாட்டில் இருந்து வந்துள்ள ரோஜா, சீனாவின் குவாங் சோ நகரின் சந்தையில் மிகவும் வரவேற்கப்படுகின்றன. கியூபா உள்ளிட்ட நாடுகள், சீனாவின் மின்னணு வர்த்தக இணையதளங்களில் கடைகளைத் திறந்துள்ளன.
சமீப, சீனா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகள் இடையேயான ஒத்துழைப்பு மேன்மேலும் அதிகரித்து வருகிறது. பசிபிக் கடலின் இந்த பக்கத்தில், பசிபிக் கடந்த வளர்ச்சிக்கான முன்மொழிவை எதிர்பார்க்கின்றோம் என்று கொலம்பியாவின் முன்னாள் அரசுத் தலைவர் தெரவித்தார்.
சீனாவின் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை எனும் முன்மொழிவு, இதே மாதிரியான முன்மொழிவாகும்.
லத்தீன் அமெரிக்க பிரதேசத்தில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை எனும் முன்மொழிவை சீனாவுடன் இணைந்து நடைமுறைப்படுத்தி வரும் ஆர்வம் அதிகம்.
அர்ஜென்டீனா பொருளாதார அமைச்சர் சீனாவில் பயணம் மேற்கொண்ட போது, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானம் தொடர்பான ஒத்துழைப்பு வரைவை முன்னெடுக்கும் உடன்படிக்கையில் சீனாவும் அர்ஜென்டீனாவும் கையொப்பமிட்டன.
இதன் மூலம், இரு தரப்புகளுக்கிடையில் விரிவான வழிமுறைகளில், பல்வேறு துறைகளின் ஒத்துழைப்புகளை மேலும் இரு நாடுகள் ஆழமாக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.