மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரம் தொடர்பாக அமைச்சர் மூர்த்தியிடம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், சின்ன உடைப்பு கிராம மக்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை விமான நிலையம் விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு, விரைவில் பணி நடைபெற உள்ளது.
இந்த நிலையில் மாநகராட்சி பகுதியில் மூன்று சென்ட் இடம் மற்றும் வீடு கட்டி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை நிலம் மற்றும் வீடுகளை வழங்க மாட்டோம் என சின்ன உடைப்பு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.