சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் இன்றும் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று 560 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு சவரன் 56 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்பிறகு ஒரு கிராம் 7065 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் உயர்ந்து ஒரு கிராம் 7570 ரூபாயாகவும், ஒரு சவரன் 60 ஆயிரத்து 560 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலை இன்று கிராமுக்கு 2 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு கிராம் 102 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 2000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.