போயிங்கின் பழுதடைந்த ஸ்டார்லைனர் கேப்சூலில் ஜூன் மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட இரண்டு நாசா விண்வெளி வீரர்கள் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் ஸ்பேஸ்எக்ஸ் வாகனத்தில் பூமிக்கு திரும்ப வேண்டும் என்று நாசா சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) அறிவித்துள்ளது.
ஸ்டார்லைனரின் சிக்கல்கள் காரணமாக வீரர்களை அதில் பூமிக்கு அழைத்துவருவது மிகவும் ஆபத்தானது என்று நாசா கருதுகிறது.
இதனால் எட்டுநாள் பணிக்காக சென்றவர்கள் எட்டு மாதங்கள் விண்வெளியில் செலவிட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
போயிங் தனது மிக முக்கியமான தயாரிப்புகளான வணிக விமானங்களின் உற்பத்தியில் தொடர்ந்து சிக்கல்களுடன் போராடி வரும் நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த ஆண்டுதான் நாசாவின் வீரர்களை விண்ணுக்கு தனது விண்கலத்தில் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.