நான் சினிமாவை விட்டு விலக இதுதான் காரணம்…. உண்மையை உடைத்த நடிகர் சிவக்குமார்…! 

Estimated read time 1 min read

தமிழ் சினிமாவில் 80’s-களில் கலக்கிய நடிகர்கள் மற்றும் நடிகைகளை இப்போதும் மக்கள் கொண்டாடி வருகின்றனர். இப்போதும் அவர்களுக்கு பட வாய்ப்புகள் கிடைப்பதோடு நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகின்றனர். அப்படி 80’s-களில் முன்னணி நடிகராக, அழகிய முருகனாக நடித்து நாயகனாக வளம் வந்தவர் தான் சிவக்குமார். இவரது பெயரை சொன்னதும் இவர் நடித்த படங்களை தாண்டி இவரது மகன்கள் சூர்யா மற்றும் கார்த்திக் தான் ஞாபகத்திற்கு வருவார்கள். சமீபத்தில் சிவக்குமார் பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார்.

அதில் அவர் கூறியதாவது, நான் நடிக்கும்போது ஒரு படத்திற்கு 5 லட்சம் வரை சம்பளம் வாங்கினேன், அப்பாவாக நடிக்கும் போது 2 லட்சம் வரை வாங்கினேன். ஆனால் சீரியலில் எனக்கு பேட்டா, சம்பளம் எல்லாவற்றையும் பார்க்கும்போது மாதத்திற்கு ஒரு லட்சத்திற்கும் மேலே வந்தது. சித்தி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது, பாசமலர் காட்சி வந்தது. அந்த படத்தின் கிளைமாக்ஸ் சீனில் சிவாஜி கணேசன் தத்துருவமாக வரவேண்டும் என்பதற்காக 2 நாட்கள் தூங்காமல் உண்ணாமல் நடித்திருந்தார். அதேபோன்று நானும் நடித்திருந்தேன்.

அப்போது பக்கத்தில் இருந்த ஒரு பெண் அவரது காதலருடன் பேசி சிரித்துக் கொண்டிருந்தார். அதனால் கோபத்துடன் உயிரைக் கொடுத்து நடித்துக் கொண்டிருக்கிறேன், இப்படி மதிக்காமல் சிரித்து பேசிக் கொண்டிருக்கிறாய் என்று கேட்டேன்.

அதற்கு அந்தப் பெண் எதற்கு சார் கத்துறீங்க எப்படியும் இதை டப்பிங் தான பேச போறீங்க என்று அலட்சியமாக கூறினார். இதனால் நடிப்புக்கு மரியாதை இல்லை, அதனால் எனக்கு இந்த நடிப்பு வேண்டாம் என்றும், இனிமேல் மேக்கப் போட மாட்டேன் என்றும் முடிவு செய்தேன். அதுதான் இப்போ வரைக்கும் நான் நடிக்கவில்லை என்று பேட்டியில் பேசினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author