குருவாயூரில் பிரதமர் மோடிக்கு இஸ்லாமிய பெண்ணாகிய ஜஸ்னா சலீம் கிருஷ்ணர் ஓவியத்தை பரிசாக வழங்கியுள்ளார்.
அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு 11 நாள் விரதம் இருப்பதாகக் கடந்த 12ம் தேதி பாரத பிரதமர் மோடி அறிவித்தார்.
அந்த வகையில் ஜனவரி 17 ஆம் தேதி பாரத பிரதமர் நரேந்திர மோடி கேரளாவில் உள்ள குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினார்.
அங்கு கோழிக்கோட்டை சேர்ந்த ஜஸ்னா சலீம் இஸ்லாமிய பெண் ஒருவர் பிரதமர் மோடிக்கு கிருஷ்ணரின் படத்தை பரிசாக வழங்கினார். இந்த புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.
அதில், ” குருவாயூரில், ஜஸ்னா சலீம் – யிடம் இருந்து பகவான் ஸ்ரீ கிருஷ்ணா ஓவியத்தைப் பரிசாக பெற்றேன். குருவாயூரில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ஓவியங்களை அவர் பல ஆண்டுகளாக வரைந்து வருகிறார். . கிருஷ்ண பக்தியில் அவரது பயணம் பக்தியின் மாற்று சக்திக்கு ஒரு சான்றாகும் ” என்று பதிவிட்டுள்ளார்.
ஓவியம் தீட்டுவதில் ஆர்வமிக்கவரான ஜஸ்னா , கிருஷ்ணர் படங்களை வரைய விரும்பினார். இயல்பாக கிருஷ்ணர் படங்களை வரையத் தொடங்கிய அவருக்கு, பின்னர் அதுவே மிகப் பிடித்தமான ஒன்றாக மாற பல படங்களை வரைய தொடங்கினார்.
இப்படியே 500க்கும் மேற்பட்ட கிருஷ்ணர் ஓவியங்களை கடந்த 8 ஆண்டுகளில் வரைந்திருக்கிறார் இருக்கிறார்.
பத்தனம்திட்டா மாவட்டத்தின் பந்தளம் அருகே உள்ள உலந்து கிராமத்தில் உள்ள ஒரு கிருஷ்ணர் கோவிலில் இவர் வரைஇந்த கிருஷ்ணர் புகைப்படம் கோவில் கருவறையில் சமர்ப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.