தென்மேற்கு வங்க கடலில் உருவான பெஞ்சல் புயல் தற்போது கரையை கடக்க ஆரம்பித்தது இதனால் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் தொடர்ந்து மழை செய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் அவசர நிலையை சமாளிக்க மத்திய மாநில அமைப்புகள் அயராது உழைத்து வருகின்றன. இயற்கை பேரிடரை எதிர்கொள்வதில் நம்பிக்கையுடனும் பொறுமையுடனும் இருப்போம். மக்கள் அவசியமின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என ஆளுநர் ஆர்.என் ரவி கூறியுள்ளார்.