வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள பெஞ்சல் புயல் தற்போது மரக்காணம் பகுதியில் கரையை கடக்க தொடங்கியுள்ளதால் பலத்த சூறைக்காற்றுடன் மழை வெளுத்து வாங்குகிறது.
இந்நிலையில் சென்னையில் புயல் காரணமாக இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது சென்னை வேளச்சேரியில் வசித்து வரும் சக்திவேல் என்பவர் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். அதாவது விஜயநகர் இரண்டாவது மெயின் ரோடு சந்திப்பில் மின் கம்பி அறுந்து கீழே கிடந்தது. இதை கவனிக்காத சக்திவேல் அதில் மிதித்த நிலையில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
இதேபோன்று மண்ணடி பகுதியில் ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்ற வட மாநிலத்தைச் சேர்ந்த சந்தன் என்ற இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
அதாவது இவர் ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்காக சென்றபோது இவர் கம்பியில் கை வைத்த நிலையில் அதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதேபோன்று வியாசர்பாடி பகுதியில் இசைவாணி என்பவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
மேலும் தற்போது புயல் கரையை கடக்க தொடங்கி விட்டதால் பொதுமக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.