நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், அபிராமி, மம்தா மோகன்தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள மகாராஜா தமிழ் திரைப்படம் சீன பாக்ஸ் ஆபிஸில் புயலை கிளப்பியுள்ளது.
நவம்பர் 29 அன்று சீனாவில் வெளியான இரண்டு நாட்களுக்குள், படம் 19.3 கோடி ரூபாயை வசூலித்ததாக சாக்னில்க் தெரிவித்துள்ளது.
சீனாவில் நாடு முழுவதும் 40 ஆயிரம் திரையரங்குகளில் இப்படம் வெளியானது.
லடாக்கில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக்கு கோட்டில் இருந்த மோதலைத் தணிக்க இந்தியாவும் சீனாவும் இராஜதந்திர ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு, சீனாவில் திரையிடப்பட்ட முதல் இந்தியத் திரைப்படமாக மஹாராஜா வரலாறு படைத்துள்ளதாக பிடிஐ தெரிவித்துள்ளது.
இந்த வெளியீடு இரு நாடுகளுக்கும் இடையிலான கலாச்சார பரிமாற்றத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக வருகிறது.