சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் டிசம்பர் 3ஆம் நாள், 2024ஆம் ஆண்டு உலக பாரம்பரிய மருத்துவ மாநாட்டிற்க்கு வாழ்த்து செய்தி அனுப்பினார்.
அவர் கூறுகையில்,
பாரம்பரிய மருத்துவம், மனிதக் குலப் பண்பாட்டுப் படைப்புச் சாதனையாகும். சீனாவின் பாரம்பரிய மருத்துவம் மற்றும் மருந்துகள், தலைசிறந்தவை. சீன நாகரிகத்தின் பொக்கினமாகவும் இவை விளங்குகின்றன. நவீனமான, பாரம்பரிய மருத்துவம் மற்றும் மருந்துகளில் சீனா எப்போதும் கவனம் செலுத்தி வருகிறது. மேலை நாட்டு மற்றும் சீனாவின் பாரம்பரிய மருத்துவத்தின் ஒருங்கிணைப்பு வளர்ச்சியையும் தூண்ட சீனா பாடுபடும் என்றார்.
தொடர்புடைய தரப்புகளுடன் சேர்ந்து, பாரம்பரிய மருத்துவ மற்றும் மருந்துகள் ரீதியில் ஒன்றிடமிருந்து ஒன்று கற்றுகொள்வதை வலுப்படுத்த சீனா விரும்புகிறது. பாரம்பரிய மருத்துவத்தை உலகச் சுகாதார அமைப்புமுறையுடன் ஆழமாக ஒன்றிணைத்து, பாரம்பரிய மருத்துவத்தின் புத்தாக்கம் வாய்ந்த வளர்ச்சியை முன்னேற்றி, பல்வேறு நாடுகளின் மக்களுக்கு நன்மை பயக்க சீனா பாடுபடும் என்றும் அவர் வலியுறுத்தினார்.