‘அறிவியல்·உலகப் புத்தாக்கம் மற்றும் அறிவியலாளர்களின் கடமை—அறிவியல் தொழில்நுட்பத்தின் மூலம் உயர்தர வளர்ச்சியை ஊக்குவிப்பது’ என்ற தலைப்பிலான 2024ஆம் ஆண்டு டெங்ச்சோங் அறிவியலாளர் மன்றம், டிசம்பர் 6ஆம் நாள் தொடங்கியது.
தொடக்க விழா, முக்கிய அரங்கு, 11 கிளை அரங்குகள் மற்றும் 9 தொடர் நடவடிக்கைகளை உள்ளடக்கிய இம்மன்றம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப புத்தாக்கத்தின் புதிய போக்குகளில் கவனம் செலுத்துகிறது.
பல்லுயிர் மற்றும் நவீன வேளாண்மை புத்தாக்க அரங்கு, ‘தொழில்நுட்பம் மற்றும் நிதி அரங்கு ஆகிய 6 கிளை அரங்குகள், தெற்காசிய மற்றும் தென்கிழக்காசியாவின் சர்வதேச அறிவுசார் சொத்துரிமை புத்தாக்கம் பற்றிய ஒத்துழைப்பு கருத்தரங்கு உள்ளிட்ட 9 தொடர் நடவடிக்கைகள் நடைபெறுகின்றன.
பிரபஞ்ச அண்டவியலின் தந்தை என்று அழைக்கப்படுபவரும், 2006ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஜார்ஜ் ஸ்மூட், அழைப்பின் பேரில் இம்மன்ற விழாவில் கலந்துகொண்டு, தலைப்பு உரையை ஆற்றுவார்.
மேலும், புகழ்பெற்ற உள்நாட்டு பல்கலைக்கழகங்களின் வேந்தர்கள், 300க்கும் மேற்பட்ட இளம் அறிஞர்கள், 500க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர் பிரதிநிதிகள், 100க்கும் மேற்பட்ட நாணய துறை நிபுணர்கள், அறிஞர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் ஆகியோர்களும் இந்த மன்றம் மற்றும் தொடர்புடைய நடவடிக்கைகளில் பங்கேற்றுள்ளனர்.