சீன மக்களின் ஜப்பானிய ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் போர் வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்க உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் செய்தியாளர்களுக்கு வரவேற்பு

 

சீன மக்களின் ஜப்பானிய ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் போர் மற்றும் உலக பாசிச எதிர்ப்பு போர் வெற்றியின் 80ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் பெய்ஜிங்கில் நடத்தப்படும். இந்த நிகழ்ச்சியில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்தியாளர்கள் பங்கேற்க வரவேற்கப்படுகிறார்கள்.

‌ஜூலை 15ஆம் நாள்‌ முதல் ஜூலை 29ஆம் நாள்‌ வரை, செய்தியாளர்கள் இதற்கான பதிவு கோரிக்கைகளை விண்ணப்பம் செய்யலாம். ‌

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்தியாளர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய, நினைவு நிகழ்ச்சியின் போது பெய்ஜிங் மாநகரில் செய்தி மையம் ஒன்று நிறுவப்படும்.

இந்த மையம், நினைவு நிகழ்ச்சியில் பங்கெடுக்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்தியாளர்களை வரவேற்று, செய்தியாளர்கள் கூட்டங்களை நடத்தி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்தியாளர்களின் பேட்டிப் பணிகளை ஒருங்கிணைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author