திருவண்ணாமலையில் தீபத்திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்த விழாவினை காண தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் செல்வார்கள். வருகிற 13-ஆம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில் தீபத் திருவிழாவை முன்னிட்டு, பல்வேறு நகரங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு 4,089 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
சென்னை உள்பட பல முக்கிய நகரங்களில் இருந்து, வரும் 15ம் தேதி வரை 4,089 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். 9 தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து கிரிவலப்பாதையை இணைக்கும் வகையில் 40 பேருந்துகள் கட்டணமின்றி இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.