ரஷியாவின் ஐக்கிய ரஷிய கட்சித் தலைவர் டிமித்ரி மெத்வேதேவுடன் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் டிசம்பர் 12ஆம் நாள் சந்தித்துப் பேசினார்.
இச்சந்திப்பில் ஷிச்சின்பிங் கூறுகையில்,
சீன-ரஷிய தூதரக உறவு நிறுவப்பட்டு 75 ஆண்டுகள் ஆகி விட்டன. இதனிடையில், பெரிய நாடுகளுக்கும் அண்டை நாடுகளுக்கும் இடையே ஒன்றுக்கொன்று மரியாதை, இணக்கமான சகவாழ்வு, ஒத்துழைப்புடன் கூட்டு வெற்றி என்ற கருப்பொருளைக் கொண்ட முற்றிலும் புதிய வழியை சீனாவும் ரஷியாவும் தேடிக் கண்டுபிடித்துள்ளன. இது, புதிய ரக சர்வதேச உறவுக்கும் அண்டையிலுள்ள பெரிய நாடுகளிடையேயான உறவுக்கும் சிறந்த மாதிரியை உருவாக்கியுள்ளது. ஐ.நா, பிரிக்ஸ் அமைப்பு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உள்ளிட்ட பலதரப்பு கட்டுக்கோப்புகளின் கீழுள்ள தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பை இரு நாடுகள் நெருக்கமாக மேற்கொள்ள வேண்டும். ஐ.நா.வை மையமாகக் கொண்டு சர்வதேச அமைப்புமுறையில் நின்று, உண்மையான பலதரப்புவாதத்தை நடைமுறைக்கு கொண்டு வந்து, உலகின் நெடுநோக்கு நிலைப்புத்தன்மை மற்றும் சர்வதேசத்தின் நீதி மற்றும் நியாயம் ஆகியவற்றைக் கூட்டாக பேணிக்காக்க வேண்டும் என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.