கன்னியாகுமரி மாவட்டம் பளுகலில் தமிழக அரசு நிலத்தை ஆக்கிரமிக்கும் விதமாக மழை நீர் ஓடை அமைக்கும் பணிகளை கேரள அரசு அதிகாரிகள் மேற்கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குன்னத்துகால் பகுதியை சேர்ந்த மன்மதன் நாயர், பலசரக்கு கடை நடத்தி வருகிறார். இவர் கடை நடத்திவரும் பகுதி, தமிழகப்பகுதி என கூறப்படுகிறது. இந்நிலையில், அங்கு வந்த கேரளாவை சேர்ந்த கும்பல், எல்லைக் கல்லை அப்புறப்படுத்திவிட்டு மழை நீர் ஓடை அமைக்கும் பணிகளை தொடங்கினர்.
இதுகுறித்து கேள்வி எழுப்பிய மன்மதன் நாயருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆகவே, தமிழக பகுதியை ஆக்கிரமிக்கும் விதமாக பணிகளை மேற்கொண்டு வரும் கேரள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.