சத்தீஸ்கர் பேருந்து விபத்து : பிரதமர் மோடி இரங்கல்!

சத்தீஸ்கர் தனியார் தொழிற்சாலை பேருந்து விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கரில் தனியார் தொழிற்சாலை பேருந்து 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்த விபத்தில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுதொடர்பாக பிரதமர் மோடி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், சத்தீஸ்கர் மாநிலம் துர்க்கில் நடந்த பேருந்து விபத்து மிகவும் வருத்தமளிக்கிறது.

தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கல்.  காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். மாநில அரசின் மேற்பார்வையில் உள்ளாட்சி நிர்வாகம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author