இசையமைப்பாளர் இளையராஜா ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
ஆண்டாள் கோயில் கொட்டகையில் இளையராஜா இசையமைத்து வெளியான திவ்ய பாசுரம், நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக இளையராஜா அங்கு வருகை தந்த நிலையில், கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து கோயிலுக்கு வருகை தந்த இளையராஜா, ஆண்டாள் ரெங்கமன்னாரை வழிபட்டார். தொடர்ந்து அவருக்கு பரிவட்டங்கள் கட்டப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து அங்கு நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.