கடந்த வாரம் வரை, இயக்குனர் சுகுமாரின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான ‘புஷ்பா: தி ரூல்’ ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதன் வெளியீடு தள்ளி வைக்கப்படவிருப்பதாக கூறப்பட்டது.
இதனை அப்படத்தின் நாயகன் நடிகர் அல்லு அர்ஜுன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
புதிய வெளியீட்டு தேதியையும் அவர் அறிவித்துள்ளார். நேற்று திங்கட்கிழமை மாலை, அல்லு அர்ஜுன் தனது எக்ஸ் பக்கத்தில் புஷ்பா 2: தி ரூலின் புதிய போஸ்டரை பகிர்ந்துள்ளார்.
அதில், “டிசம்பர் 6, 2024 முதல் திரையரங்குகளில் #புஷ்பா2 ரூல்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது; புதிய தேதி அறிவிப்பு
You May Also Like
‘பாகுபலி’ படத்தின் தினசரி படப்பிடிப்பு செலவு Rs.25-30 லட்சம் ஆனதாம்
October 29, 2025
துரந்தர் படத்தை பார்த்த பின்லாந்து அதிபர்
March 8, 2026
