இந்தியாவின் முதலாவது, உலகளாவிய பாரதப் போக்குவரத்து வாகனக் கண்காட்சியை பிரதமர் மோடி திறந்து வைத்து உரையாற்றுகிறார்.
புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பிப்ரவரி 2 அன்று மாலை 4:30 மணிக்கு நடைபெறும் இந்தியாவின் முதலாவது மிகப்பெரிய, உலகளாவிய பாரதப் போக்குவரத்து வாகனக் கண்காட்சி 2024-ல் திறந்து வைத்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.
போக்குவரத்து வாகனங்கள் உற்பத்தியில் இந்தியாவின் திறன்களை இக்கண்காட்சி வெளிப்படுத்தும். இதில் கண்காட்சிகள், மாநாடுகள், வாங்குவோர் விற்போர் சந்திப்புகள், மாநில அரசுகளின் சார்பிலான அமர்வுகள், சாலைப் பாதுகாப்பு அரங்குகள், கோ-கார்ட்டிங் எனப்படும் கார் பந்தயம் போன்றவை இடம்பெறும்.
50-க்கும் அதிகமான நாடுகளில் இருந்து 800 கண்காட்சியாளர்களுடன், அதிநவீன தொழில்நுட்பங்கள், நீடித்தத் தீர்வுகள், போக்குவரத்து வாகன உற்பத்தியில் உள்ள முன்னேற்றம் ஆகியவற்றை இக்கண்காட்சி முன்னிலைப்படுத்தும்.
இதில் 28-க்கும் அதிகமான வாகன உற்பத்தியாளர்களும், 600-க்கும் அதிகமான வாகன உதிரிபாக உற்பத்தியாளர்களும் பங்கேற்கின்றனர். 13-க்கும் அதிகமான உலகளாவிய சந்தைகளில் இருந்து 1000-க்கும் அதிகமான நிறுவனங்கள் இந்த நிகழ்வில் தங்கள் தயாரிப்புகள், தொழில்நுட்பங்கள், சேவைகளைக் காட்சிப்படுத்தும்.
மாநிலங்கள் தங்கள் பிராந்தியங்களில் உள்ள போக்குவரத்து வாகன உற்பத்திப் பங்களிப்பை விளக்கும் வகையில் மாநில அரசுகளின் அமர்வுகளும் இக்கண்காட்சியில் இடம் பெறுகின்றன.