தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்த கன மழையால் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பிற்பகல் முதல் நள்ளிரவு வரை இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக பொதுமக்கள் வராக நதியில் குளிக்கவோ, ஆற்றை கடக்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சேலத்தில் இரவு 6 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால், அணைமேடு பாலத்தில் நீர் ஆர்ப்பரித்துச் செல்கிறது. சேலத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், அயோத்திப்பட்டினம், வலசையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியதால் மாநகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.