சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை மண்டல பூஜை நடைபெற உள்ளது.
கேராளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜையையொட்டி, சுவாமி ஐயப்பன் விக்ரகத்தில் அணிவிப்பதற்காக திருவிதாங்கூர் மன்னர் வழங்கிய தங்க அங்கி, பம்பை கணபதி கோயிலில் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து தங்க அங்கி, இன்றைய தினமே சன்னிதானம் கொண்டு செல்லப்பட்டு சுவாமிக்கு அணிவிக்கப்படுகிறது. நாளை, சந்தன அபிஷேகத்துக்கு பின்னர், மீண்டும் ஐயப்பன் விக்கரகத்திற்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு, மண்டல பூஜை நடைபெறும்.
இதனையொட்டி, இன்று 50 ஆயிரம், நாளை 60 ஆயிரம் பக்தர்கள் மட்டும் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். இதனால், இன்று மதியம் முதல் பக்தர்கள் பம்பையில் இருந்து மலை ஏற தடை விதிக்கப்பட்டுள்ளது.