சீன விண்வெளி நிலையத்தின் அறிவியல் ஆய்வு மற்றும் பயன்பாட்டில் முன்னேற்றம் பற்றிய அறிக்கை வெளியீடு

சீனாவின் மனிதரை ஏற்றிச்செல்லும் விண்வெளித் திட்டப்பணி அலுவலகம் வெளியிட்ட செய்தியின்படி, 2024ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் நாளில், சீன விண்வெளி நிலையம் உருவாக்கப்பட்ட 2ஆவது ஆண்டு நிறைவையொட்டி, சீன விண்வெளி நிலையத்தின் அறிவியல் ஆய்வு மற்றும் பயன்பாட்டில் முன்னேற்றம் பற்றிய அறிக்கை வெளியிட்டப்பட்டது. கடந்த 2 ஆண்டுகாலத்தில் சீன விண்வெளி நிலையத்தின் ஆய்வு மற்றும் பயன்பாட்டு முன்னேற்றங்கள் குறித்து இதில் அமைப்புமுறை ரீதியில் தொகுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளில், 4 முறை மனிதர்களை ஏற்றிச்சென்ற விண்வெளிக் கலப் பயணங்கள், 3 முறை சரக்கு போக்கு வினியோகங்கள், விண்வெளி கலங்கள் விண்வெளிக்குச் சென்று பூமிக்குத் திரும்பிய 4 கடமைகள் முதலிய சாதனைகள் படைக்கப்பட்டன. மேலும், 4ஆவது ஏற்பாடு விண்வெளிவீரர்களின் தேர்வுப் பணிகள் முடிவடைந்துள்ளன.

 

You May Also Like

More From Author