அமெரிக்காவில் புதன்கிழமை காலை மத்திய நியூ ஆர்லியன்ஸில் மக்கள் கூட்டத்தின் மீது வாகனம் மோதியதில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் அதிகாலை 3.15 மணியளவில் போர்பன் தெரு மற்றும் ஐபர்வில்லி சந்திப்பில் நடந்தது.
போர்பன் தெருவில் புத்தாண்டைக் கொண்டாட ஆயிரக்கணக்கானோர் கூடியதாகவும் கூறப்படுகிறது.
இது பரபரப்பான இரவு வாழ்க்கை மற்றும் துடிப்பான கலாச்சாரத்திற்கு பெயர் பெற்ற தெருவாகும்.
ஒரு டிரக், அதிக வேகத்தில் கூட்டத்தின் மீது மோதியதில் இந்த கோர சம்பவம் நடைபெற்றது.
மேலும் ஓட்டுநர் வெளியேறி ஆயுதத்தால் சுடத் தொடங்கினார் என்று செய்தி நிறுவனம் ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.