தமிழகத்தில் சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி மற்றும் குடியரசு தினம் போன்ற முக்கிய தினங்களில் கிராம சபை கூட்டம் நடைபெறுவது வழக்கம்.
இந்த கிராம சபை கூட்டங்களின் போது பொதுமக்கள் தங்கள் ஊர்களில் உள்ள பொது பிரச்சனைகள் பற்றி சொல்லலாம். அந்த வகையில் தற்போது குடியரசு தின விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற இருக்கிறது.
அதன்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் ஜனவரி 26 ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கிராம சபை கூட்டங்களை மத சார்புள்ள வளாகத்தில் நடத்தக்கூடாது.
மேலும் முன்கூட்டியே கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் இடத்தை பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் ஜனவரி 26 ஆம் தேதி காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டங்களை தொடங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.