“பாம்பன் புதிய ரயில் பாலம் 100% தயார்”- தெற்கு ரயில்வே அதிகாரி

Estimated read time 0 min read

பாம்பன் புதிய ரயில் பாலம் 100 சதவீதம் வலுவாகவும், பாதுகாப்பாகவும் கட்டப்பட்டுள்ளது, ஜனவரி முதல் வாரத்தில் ராமேஸ்வரத்திற்கு ரயில் சேவை தொடங்க அதிக வாய்ப்பு உள்ளது என தென்னக ரயில்வே துணை பொதுமேலாளர் தெரிவித்துள்ளார்.

மண்டபம் நிலப்பரப்புடன் ராமேஸ்வரம் தீவை இணைப்பதில் பாம்பன் ரயில் பாலம் முக்கிய பங்காற்றி வந்தது. இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பழைய ரயில் பாலத்தில் உள்ள தூக்கு பாலத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

இதனை அடுத்து அதன் அருகிலேயே சுமார் 550 கோடி மதிப்பீட்டில் புதிய ரயில் பாலங்கள் கட்டுவதற்காக கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது அந்த பணிகள் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் பாம்பன் புதிய ரயில் பாலத்தில் நடைபெற்ற பணிகளில் சிறு சிறு குறைபாடுகள் இருப்பதாக ரயில்வே துறை சார்ந்த சேப்டி அதிகாரி கூறியதை அடுத்து சர்ச்சைகள் எழுந்தது. இதையடுத்து தென்னக ரயில்வே சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து முன்னணி சேனலில் உள்ள ஊடகவியலார்களை பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு அழைத்து வந்துள்ளனர். மேலும் ஊடகவியலாளர்கள் பாம்பன் புதிய ரயில் பாலத்தை பார்வையிட்டு நடைபெற்ற பணிகளை குறித்தும் ரயில்வே துறை அதிகாரிகள் ஒவ்வொன்றாக விளக்கினர்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தென்னக ரயில்வே துணை பொது மேலாளர் சீனிவாசன், ”பாம்பன் புதிய ரயில் பாலத்தின் கட்டுமான பணிகள் 100% பாதுகாப்பாகவும் வலுவாகவும் உள்ளது.

வருகின்ற ஜனவரி முதல் வாரத்தில் பாம்பன் பாலம் திறக்கப்பட்டு ராமேஸ்வரத்திற்கு ரயில் சேவை தொடங்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது. மேலும் இந்தியாவிலேயே முதல் செங்குத்து தூக்கு பாலமாக இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

புதிய பாலத்தில் கடலுக்கு நடுவே சுமார் 100 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவற்றில் 99 தூண்கள் 18. 3 மீட்டர் நீளமும் ஒரு தூண் 72.5 மீட்டர் நீளமும் கொண்டதாக அமைக்கப்பட்டது.

இந்த புதிய ரயில் பாலமானது பழைய பாலத்தை விட மூன்று மீட்டர் உயரமாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 72.5 மீட்டர் நீளமுள்ள செங்குத்து தூக்கு பாலம் சுமார் 17 மீட்டர் வரை தூக்கக் கூடியதாகவும் கட்டமைக்கப்பட்டுள்ளது.

மேலும் துருப்பிடிப்பிலிருந்து பாதுகாக்கும் வலுவான மேற்பரப்பு அமைக்கப்பட்டுள்ளதோடு பராமரிப்பு இல்லாமல் இருக்கலாம் சுமார் 38 ஆண்டுகள் வரையும் குறைந்தபட்ச பராமரிப்புடன் 58 ஆண்டுகள் வரை பாலத்தின் ஆய்வு காலம் நீடிக்கும்” என்றார்.

Please follow and like us:

You May Also Like

More From Author