உலகின் மிகப்பெரிய மத நிகழ்வான மகா கும்பமேளா, உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் இன்று திங்கள்கிழமை தொடங்கியது.
இந்த நிகழ்வை குறிக்கும் வகையில் கங்கை நதியில் ஏராளமான பக்தர்கள் நீராடினர்.
144 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் 45 நாள் மகா கும்ப மேளா, கங்கை, யமுனை மற்றும் மாயமான சரஸ்வதி நதிகளின் திரிவேணி சங்கமத்தை குறிக்கும்.
வழக்கமாக கும்பமேளா என்பது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடப்பது. ஆனால், இன்று(ஜனவரி 13) நடக்க உள்ள கும்பமேளா 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கிறது.
இந்த மகா கும்பமேளா காலத்தில் நான்கு கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் வரும் என்பது கூற்று.
மேலும் 45 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் இந்த நிகழ்விற்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.