சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பிப்ரவரி 6ஆம் நாள் முற்பகல், சீனாவில் பயணம் மேற்கொண்டிருக்கின்ற புருணை சுல்தான் ஹசனாலுடன் சந்திப்பு நடத்தினார்.
இரு தரப்புகளுக்கிடையில் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 30 ஆண்டுகாலத்தில், சர்வதேச மற்றும் பிரதேச விவகாரங்களில், இரு தரப்பும் சீராக ஒத்துழைத்து, இப்பிரதேசத்தின் அமைதி, நிதானம், வளர்ச்சி மற்றும் செழுமைக்கு ஆக்கப்பூர்வமாகப் பங்காற்றியுள்ளன என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.
ஒரே சீனா எனும் கொள்கையை புருணை பின்பற்றி வருகிறது.
சீனத் தரப்புடன் இணைந்து ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, பல தரப்புவாதம் மற்றும் தாராள வர்த்தகத்திற்கு உறுதியாக ஆதரவு அளித்து, வளரும் நாடுகளின் பொது நலன்களைப் பேணிக்காக்க வேண்டும் என்று ஹசனால் தெரிவித்தார்.