உபெர் நிறுவனம் இந்தியாவில் தனது முதல் நீர் போக்குவரத்து சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் செயலி மூலம் சுற்றுலாப் பயணிகளுக்கு ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரியில் ஷிகாரா சவாரி எனும் படகு டாக்சிகளை முன்பதிவு செய்வதற்கான வசதியை வழங்குகிறது.
உபெர் ஷிகாரா என அழைக்கப்படும் இந்தச் சேவையானது, ஜம்மு காஷ்மீரில் உள்ள உள்ளூர் ஷிகாரா ஓட்டுநர்களுக்கு ஆதரவளித்து சுற்றுலா அனுபவத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அறிமுகம் குறித்து பேசிய உபெர் இந்தியா மற்றும் தெற்காசிய தலைவர் பிரப்ஜீத் சிங், காஷ்மீரின் இயற்கை எழில் கொஞ்சும் நிலப்பரப்பில் சுற்றுலாவை மேம்படுத்த பாரம்பரியத்துடன் தொழில்நுட்பத்தை இணைக்கும் நிறுவனத்தின் இலக்கை எடுத்துரைத்தார்.