ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோனாமார்க்கில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் முக்கியத்துவம் வாய்ந்த Z-Morh சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
திங்கள்கிழமை காலை சோனாமார்க் சுரங்கப்பாதை என்று அழைக்கப்படும் Z-Morh சுரங்கப்பாதையை திறந்த வைத்தார் பிரதமர்.
அப்போது அவருடன் ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா, யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்ட தலைவர்களும் உடன் இருந்தனர்.
6.5 கிலோமீட்டர் நீளமுள்ள Z-Morh சுரங்கப்பாதை, ஸ்ரீநகர் மற்றும் சோனாமார்க் இடையே இணைப்பை வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இதனால், சோனாமார்க்கின் சுற்றுல்லாத்துறை மேம்படும், பிரபல குளிர்கால விளையாட்டு இடமாக மேம்படுத்த உதவும் என்று ஜம்மு மற்றும் காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கூறினார்.