சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளையொட்டி நாடாளுமன்றத்தில் உள்ள அவரது உருவப்படத்திற்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளான ஜனவரி 23ஆம் தேதி பராக்கிரம தினமாக கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, நேதாஜியின் பிறந்த நாளையொட்டி நாடாளுமன்றத்தில் உள்ள அவரது உருவப் படத்திற்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள், மக்களவை சபாநாயகர், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதனை அடுத்து, சம்விதான் சதன் அரங்கில் கூடியிருந்த மாணவ, மாணவிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.