சிங்கம் கடித்து குதறியதில் வாலிபர் உயிரிழப்பு…

Estimated read time 0 min read

திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவில் சிங்கங்கள் உலாவும் பகுதிக்குள் குதித்த வாலிபர் சிங்கம் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவில் பல்வேறு வகையான வனவிலங்குகளை பராமரித்து வருகின்றனர். இந்த வனவிலங்கு பூங்காவிற்கு தினமும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளாக வருவது வழக்கம்.

திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் மட்டும் அல்லாது தனிப்பட்ட முறையில் அங்கு வருபவர்களும் உள்ளனர். இன்று மாலை பூங்காவில் சிங்கங்களை பராமரிக்கும் பகுதிக்குள் திடீரென்று ஏறி குதித்த ஒரு நபரை அந்த பகுதியில் உலாவிய சிங்கம் ஒன்று தாக்கி கடித்த குதறியது.

இதனை அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் பார்த்து சத்தம் போட்டு சிங்கத்தை விரட்ட முயன்றனர். ஆனால், அதற்குள் அவரை சிங்கம் கடித்து குதறி கொன்றுவிட்டது. இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த உயிரியல் பூங்கா அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோர் சிங்கத்தை அங்கிருந்து கூண்டுக்குள் விரட்டிவிட்டு அவருடைய உடலை மீட்டனர்.

தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த திருப்பதி போலீசார் அவருடைய உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் அவருடைய பெயர் பிரகலாத குப்தா என்றும் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.

அவர் தனியாக வந்தாரா அல்லது அவருடன் வேறு யாராவது வந்திருக்கிறார்களா? எதற்காக அவர் சிங்கங்கள் வசிக்கும் பகுதிக்குள் இறங்கினார் என்று போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

 

Please follow and like us:

You May Also Like

More From Author