2024ஆம் ஆண்டில் சீனாவின் மொத்த தானிய விளைச்சல் 706.5 மில்லியன் டன்களை எட்டியுள்ளது.
இது கடந்த ஆண்டை விட 1.6 சதவீதம் அதிகமாகும் என்று சீனத் தேசிய புள்ளிவிபரப் பணியகம் 13ஆம் நாள் வெள்ளிக்கிழமை வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டது.
விளை நிலப் பாதுகாப்பு மற்றும் உணவுப் பாதுகாப்பின் பொறுப்புகளை பல்வேறு துறைகள் கண்டிப்பான முறையில் நிறைவேற்றி, தானிய உற்பத்தியைச் செவ்வனே செய்துள்ளன. இந்நிலைமையில், இவ்வாண்டு முழுவதும் அமோக தானிய விளைச்சல் பெறப்பட்டது.