இந்திய பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், வரும் பிப்ரவரி 13 ஆம் தேதி வாஷிங்டனில் சந்திப்பார்கள் என்று இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
பிரதமரின் வருகைக்காக அமெரிக்காவுடன் முன்கூட்டிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளியுறவு அமைச்சகம் சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
டிரம்ப் இரண்டாவது முறையாகப் பதவியேற்ற பிறகு, பிரதமர் மோடி அமெரிக்காவிற்கு மேற்கொள்ளும் முதல் இருதரப்பு விஜயம் இதுவாகும்.
கூடுதலாக, டிரம்ப் பதவியேற்ற சில வாரங்களுக்குள் இருதரப்பு விஜயமாக வாஷிங்டன் டிசிக்குச் செல்லும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில வெளிநாட்டுத் தலைவர்களில் பிரதமர் மோடியும் ஒருவர்.
திட்டத்தின்படி, பிரதமர் தனது இரண்டு நாள் பாரிஸ் பயணத்தை முடித்துக்கொண்டு வாஷிங்டன், டிசிக்கு பயணம் மேற்கொள்வார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.