தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் மாதம் பொது தேர்வு நடைபெற இருக்கும் நிலையில் ஏற்கனவே தேர்வு அட்டவணை வெளியாகிவிட்டது. இந்நிலையில் இன்று 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடைபெற இருக்கிறது.
அதன்படி 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பிப்ரவரி 14ஆம் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெறுகிறது. அதேபோன்று 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 15ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெறுகிறது. மேலும் இந்த தேர்வில் கண்டிப்பாக மாணவர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.