Election Breaking: டெல்லி சட்டசபை தேர்தல்.. பாஜக 40 இடங்களில் முன்னிலை… ஆம் ஆத்மிக்கு தொடர் பின்னடைவு…!!! 

Estimated read time 1 min read

தலைநகர் டெல்லியில் 70 சட்டசபை தொகுதிகள் இருக்கும் நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களையும், பாஜக 8 இடங்களையும் கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.

இந்நிலையில் 2025 ஆம் ஆண்டுடெல்லி சட்டசபை தேர்தலிலும் காங்கிரஸ் பாஜக மற்றும் ஆம் ஆத்மி மாற்றும் இடையே மும்முனைப் போட்டி நிலவியது. இங்கு கடந்த 5-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்ற நிலையில் மொத்தம் 60.42 சதவீத வாக்குகள் பதிவானது.‌

இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. டெல்லியில் ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 36 தொகுதிகளை வெல்ல வேண்டும்.

இந்நிலையில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் தொடர்ந்து பாஜக முன்னிலையில் இருக்கிறது. அதன்படி தற்போது பாஜக 40இடங்களில் முன்னிலையில் இருக்கும் நிலையில் ஆம் ஆத்மி கட்சி 25 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் வெறும் ஒரு இடத்தில் முன்னிலையில் இருக்கிறது.மேலும் பெரும்பான்மைக்கு 36 இடங்கள் தேவைப்படும் நிலையில் தொடர்ந்து பாஜக முன்னிலை வகித்து வருகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author