அமெரிக்க அரசுக்கு 3 முன்னெச்சரிக்கைகளைக் கொடுத்த கடன் தர மதிப்பீட்டின் குறைப்பு

அமெரிக்காவின் கடன்தர மதிப்பீட்டைச் சர்வதேச மதிப்பீட்டு நிறுவனமான ஃபிட்ச் குறைத்துள்ளது. இதற்கு அமெரிக்க ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சிக்கு இடையேயான மோதல் போக்கு முக்கியக் காரணமாகச் சுட்டப்பட்டுகின்றது. அந்நாட்டில் காணப்படும் அரசியல் ரீதியிலான பிளவினால் நிர்வாக திறன் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பது என்பது வாஷிங்டனுக்குக் கொடுக்கப்பட்ட முதலாவது முன்னெச்சரிக்கையாகும் எனக் கருதப்படுகின்றது.

அரசியல் சர்ச்சை அமெரிக்காவின் இரு கட்சிகளிடையே உள்ள உறவின் சிறப்பான அடையாளமாக மாறியுள்ளது. தொடர்ச்சியாக சரிந்துள்ள அமெரிக்க அரசின் நிர்வாகத் திறன் மீதான அதிருப்தி மற்றும் ஏமாற்றத்தை இம்முறை கடன் தர மதிப்பீட்டுக் குறைவு வெளிப்படுத்தியுள்ளதாகவும் கருதுவதற்கு
இடமுண்டு. அதே வேளையில், அமெரிக்காவிற்கு அதிகமான கடன் இருப்பது தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்பதும், கடன் விரிவடைந்த பொருளாதாரத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு கவலையாக இருக்கும் என்பதும் வாஷிங்டனுக்கு கொடுக்கப்பட்ட 2ஆவது முன்னெச்சரிக்கையாகும்.

3ஆவது முன்னெச்சிக்கையானது அமெரிக்காவின் நம்பகத்தன்மையுடன்
தொடர்புடையது. அமெரிக்க டாலர் பயன்பாட்டுக் குறைப்பின் முன்னேற்றப் க்கு விரிவாக்கப்படக் கூடும். குறிப்பாக, அரசின் கடன் தர மதிப்பீட்டைச் சார்ந்திருந்ததால் அமெரிக்க டாலர் சர்வதேச நாணயமாக மாறியுள்ளது. கடன் தர மதிப்பீடு குறைக்கப்பட்டால், மக்கள் புதிய நாணயத்தைத் தேர்வு செய்வர் என்பது உறுதி.

Please follow and like us:

You May Also Like

More From Author