கன்னியாகுமரி, கோவை வரிசையில் மத்திய சென்னையும் பாஜகவின் கோட்டையாக மாறி வருவதாக பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை, ராயப்பேட்டையில் பாஜக கிழக்கு சென்னை மாவட்ட தலைவர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன், பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் ஆகியோர் பங்கேற்று புதிதாக பொறுப்பேற்றுள்ள சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் B.கிரியை அறிமுகம் செய்து வைத்தனர்.
இதனைதொடர்ந்து பேசிய கரு.நாகராஜன், பாஜகவை பார்த்து ஏளனமாக பேசியவர்கள் தற்போது அண்ணாமலையை பார்த்து பயப்படுகிறார்கள் என்றும், கன்னியாகுமரி, கோவை வரிசையில் மத்திய சென்னை பாஜகவின் கோட்டையாக மாறி வருவதாகவும் கூறியுள்ளார்.