பிஹார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மகாகத்பந்தன் கூட்டணியில் இருந்து வெளியேறி, இன்று காலை முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ் குமார், மாலையில் பாஜக ஆதாரவுடன் 9-வது முறையாக பிஹார் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிலையில் பிஹார் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டா நிதிஷ் குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
பீகாரில் அமைக்கப்பட்டுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் ஆசைகளை நிறைவேற்றுவதற்கு எந்தக் முயற்சியையும் விடாது.
बिहार में बनी एनडीए सरकार राज्य के विकास और यहां के लोगों की आकांक्षाओं को पूरा करने के लिए कोई कोर-कसर नहीं छोड़ेगी। @NitishKumar जी को मुख्यमंत्री और सम्राट चौधरी जी एवं विजय सिन्हा जी को उप मुख्यमंत्री पद की शपथ लेने पर मेरी बहुत-बहुत बधाई।
मुझे विश्वास है कि यह टीम पूरे…
— Narendra Modi (@narendramodi) January 28, 2024
முதல்வராக நிதீஷ்குமாரையும், துணை முதல்வர்களாக பதவியேற்ற சாம்ராட் சவுத்ரி, விஜய் சின்ஹா அவர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் குழு எனது மாநிலத்தின் குடும்ப உறுப்பினர்களுக்கு முழு அர்ப்பணிப்புடன் சேவை செய்யும் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.