வரும் 22ம் தேதி முதல் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு மீண்டும் கப்பல் சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகை துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் வரையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து, வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறுத்தம் செய்யப்பட்டது.
இந்நிலையில் பிப்ரவரி 22-ம் தேதி முதல் மீண்டும் நாகப்பட்டினத்தில் இருந்து காங்கேசன் துறைமுகத்துக்கு கப்பல் சேவை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இரு வழி பயணத்திற்கு 9 ஆயிரத்து 700 ரூபாய் வீதம் கட்டணம் வசூலிக்கப்பட்டது. தற்போது சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக அந்த கட்டணம் 8 ஆயிரத்து 500 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.