தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கிக் கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான விடுதலை 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ட்ரெயின் திரைப்படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தத் திரைப்படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் விஜய் டிவியில் நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். கமல்ஹாசன் அளவுக்கு எந்தவித சர்ச்சைக்கு இடம் கொடுக்காமல் விஜய் சேதுபதி சிறப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தார்.
இப்படியான நிலையில் விஜய் சேதுபதி அடுத்ததாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மனைவியும் இயக்குனருமான கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காதலிக்க நேரமில்லை திரைப்படத்தை கிருத்திகா உதயநிதி இறுதியாக இயக்கி இருந்த நிலையில் தற்போது விஜய் சேதுபதியை வைத்து அவர் படம் இயக்க உள்ளார்.
சாதாரண கதை களத்தில் தன்னுடைய புதிய படத்தை விஜய் சேதுபதியை வைத்து கிருத்திகா உதயநிதி இயக்க திட்டமிட்டுள்ளார். தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை விஜய் சேதுபதி கொடுத்து வரும் நிலையில் தற்போது கிருத்திகா உதயநிதியிடம் சென்று சிக்கிக்கொண்டாரா என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.