காரைக்கால் மீனவர்களைத் தொடர்ந்து, நாகை மீனவர்களும் இலங்கை கடற்படையை கண்டித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையின் துப்பாக்கிச் சூடு மற்றும் கைது நடவடிக்கையை கண்டித்து, காரைக்கால் மீனவர்கள் 8 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து நாகை மாவட்ட மீனவர்களும் தற்போது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்தவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
இதனால் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகளும் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.