பிரதமர் மோடி மற்றும் எலான் மஸ்க் சந்திப்பின் எதிரொலியாக, டெஸ்லா நிறுவனம் இந்தியவில் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அண்மையில் அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடியை, டெஸ்லா நிறுவன சிஇஓ எலான் மஸ்க் சந்தித்திருந்தார். இதன் எதிரொலியாக டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தனது இந்திய வருகையை அந்நிறுவனம் சூசகமாக அறிவித்துள்ளது.
அதன்படி வாடிக்கையாளர் மற்றும் பேக்-எண்ட் குழு என சுமார் 13 ரோலுக்கான வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது குறித்த அறிவிப்பு லிங்க்ட்இன் தளத்தில் வெளியாகி உள்ளது.
அண்மையில் 40,000 டாலருக்கு மேல் விலை கொண்ட உயர் ரக சொகுசு கார்களுக்கான சுங்க வரியை, 110 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக இந்தியா குறைத்தது. இது நாட்டில் மின்சார சொகுசு கார் உற்பத்தியாளர்களுக்கு பிரகாசமான சந்தை வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக துறை சார்ந்த வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த சூழலில்தான் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் ஆட் தேர்வை மேற்கொண்டுள்ளது.