தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இடிந்து விழுந்த பகுதியை அடைய குழுக்கள் போராடி வருகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுரங்கப்பாதையின் கூரையின் மூன்று மீட்டர் பகுதி சரிந்ததில் எட்டு தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) அதிகாரிகள் கடுமையான தடைகள் இருப்பதாகவும், மண் முழங்கால் அளவை எட்டியதால் பாதிக்கப்பட்ட பகுதியை அடைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
“உள்ளே செல்ல வாய்ப்பில்லை. நாங்கள் வேறு அணுகுமுறையை எடுக்க வேண்டியிருக்கும்.” என்று SDRF அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தெலுங்கானா சுரங்கப்பாதை சரிவு; தொழிலாளர்களை மீட்பதில் சிக்கல்
