தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் இரு நாட்கள் நடைபெற்ற G20 குழு அமைச்சர்களின் கூட்டம் 21ம் தேதி நிறைவு பெற்றது. உலகளாவிய சவால்களைச் சமாளிக்க பல்வேறு நாடுகள் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என இக்கூட்டத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
தென்னாப்பிரிக்க குடியரசுத் தலைவர் சிரில் ராமபோசா, புவியியல் அரசியல் பதட்டங்கள், காலநிலை மாற்றம், தானிய பாதுகாப்பு முதலிய உலகளாவிய சவால்களைச் சமாளிக்க, ஆப்பிரிக்க நாடுகள், பிற பிராந்திய நாடுகளுடன் ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா, G20 குழுவின் தலைமை பதவி ஏற்கும் காலத்தில், “ஒற்றுமை, சமத்துவம் மற்றும் நீடிப்புத் தன்மை” என்பதை தனது நிகழ்ச்சி நிரல் தலைப்பாகக் கொண்டு செயல்படுகிறது.
இக்கூட்டம், பலதரப்புவாதத்தை வலுப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது. சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ இக்கூட்டத்தில் பங்கேற்றார்.
படம்:XinHua News