புது தில்லி பிரகதியில் உள்ள பாரத் மண்டபத்தில் உள்ள டவுன் ஹால் பிரதமர் நரேந்திர மோடி, பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியின் 7வது பதிப்பு, “பரிக்ஷா பே சர்ச்சா 2024” இன்று காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
இந்த ஆண்டுக்கான பரிக்ஷா பே சர்ச்சாவில் 2.26 கோடி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பதிவு செய்திருக்கின்றனர்.
பரீக்ஷா பே சர்ச்சா என்பது மாணவர்களுக்கு மன அழுத்தமில்லாத சூழலை உருவாக்க, பிரதமர் மோடி தலைமையிலான ஒரு பெரிய இயக்கத்தின் ஒரு பகுதியாகும். இந்நிகழ்ச்சி கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் மூலம் ஏராளமானோர் பயனடைந்து வருகிறார்கள்.
ஆகாஷ்வானியில் நடந்த மன் கி பாத் நிகழ்ச்சியில், ‘பரிக்ஷா பே சர்ச்சா’வின் 7வது பதிப்பை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக பிரதமர் மோடி கூறினார். இந்தத் திட்டம் மாணவர்களுடன் தொடர்பு கொள்ளவும், அவர்களுக்கு தேர்வு தொடர்பான மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது என்று கூறினார்.
கடந்த ஏழு ஆண்டுகளில், கல்வி மற்றும் தேர்வுகள் தொடர்பான பல்வேறு பிரச்சனைகளை விவாதிப்பதற்கான மிகச் சிறந்த ஊடகமாக ‘பரிக்ஷா பே சர்ச்சா’ உருவெடுத்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.